Monday, August 5, 2013

After Hours - உலக சினிமா

****************************************முன் குறிப்பு************************************************
என்னை மிகவும் கவர்ந்த உலக சினிமா திரைப்படங்களை பற்றிய விமர்சனத்தை 'சாகும் முன் காண வேண்டிய உலக சினிமா' என்ற பகுதியில் எழுதி வருகிறேன். என்னைப் போன்ற உலக சினிமா பைத்தியங்களுக்காக.
*********************************************************************************************************

என்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவரான Martin Scorseseயின் படங்களை தேடித் பிடித்து பார்த்த பொழுது தான் கண்ணில் சிக்கியது இந்த படம். ஏழு முறை சிறந்து இயக்குனருக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இவரின் பல படங்களை நீங்கள் பார்த்து இருந்தாலும், பெரிதும் பேசப் படாத இந்த After Hours படத்தை பார்த்திருப்பது சற்று கடினமே.

படத்தின் முன்னோட்டம் : 

(முதலில் play பொத்தானை கிளிக் செய்து பின் pause செய்து மேலே படிக்கவும்)


கதை சுருக்கம் :

பால்(Paul) என்ற ஒரு கணினி நிறுவன ஊழியன், ஒரு மாலை தன் வீடு திரும்பும் பொழுது ஒரு உணவகத்தில் மார்சி(Marcy) என்ற பெண்ணை சந்திக்கிறான். இருவருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் நாட்டம் இருக்க, அதை பற்றி அவர்கள் பேச, மார்சி விடை பெற்று செல்லும் முன் தன் தொலைபேசி எண்ணை பாலிடம் கூறிச் செல்கிறாள். 


தன் வீடு சென்று அந்த எண்ணுக்கு பால் அழைக்க, மார்சி அவனை அவள் தங்கியிருக்கும் தோழியின் இல்லத்திற்கு வருமாறு அழைக்க, அவனும் இருபது டாலர்களுடன், ஒரு டாக்ஸி பிடிக்க, அந்த டாலர் நோட்டு காற்றில் பறக்க, வேறு பணம் ஏதும் இன்றி அவன் தவிக்க, அன்றைய இரவின் அவன் இன்னல்கள் தொடங்குகின்றன. இப்படி ஒரு இரவு முழுக்க அடுத்து அடுத்து அவன் சந்திக்கும் சிக்கல்களே மீதி கதை.

படத்தில் நான் ரசித்தவை :

ஓர் இரவில் நாயகனுக்கு இன்னல்கள் நடக்கும் வண்ணம் கதை படமாக்கப் பட்டுள்ளது முதல் சிறப்பு. படம் முழுக்க இரவில் எடுக்கப் பட்டக் காட்சிகளே இருக்கும். 

மார்சி வீடு சென்ற பால், சில குறிப்புகள் மூலம், மார்சிக்கு எதோ ஒரு பயங்கரத் தீக்காயம் இருக்குமோ என்று எண்ணும் நிமிடங்கள், அந்த காயங்களைக் கண்டது போல் நம்மையும் ஒரு கணம் கண் மூட வைத்து விடும்.
    
நல்லிரவில் ரயில் கட்டணம் உயர, ஒரு டாலருக்கு குறைவான பணமே அவனிடம் இருக்க, வீடு திரும்ப முடியாமல் ரயில் நிலையத்தில் அவன் தவிக்கும் காட்சிகள் மிகவும்  இயல்பாக இருக்கும்.


அவன் அந்த இரவில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் முதலில் அவனுக்கு உதவினாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருக்கும் அவன் எதிரி ஆகிவிடுகிறான். 

படம் தொடங்குவது அவன் அலுவலகத்தில், கடும் போராட்டங்களுக்கு பின், அவனது காலை விடியும் பொழுது, அதே அலுவலகத்தின் வாசலில் அவன் இருப்பபான்.

படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு ஓட்டம் இருக்க, எந்த நிமிடமும் நமக்கு விறு விறுப்பு குறையாது. 

எதார்த்த சினிமா என்ற பட்டியலில் என்றுமே இந்த படத்தை நான் பரிந்துரைப்பேன்.

முக்கிய எச்சரிக்கை: ஆங்கில படத்திற்கே உரிதான சில ஆபாச காட்சிகள், இரண்டு இடங்களில் இந்த படத்தில் வரும். பார்த்துவிட்டு என்னை அடிக்க தேடக் கூடாது.

 (இப்பொழுது மேலே pause  செய்த முன்னோட்டத்தை play செய்யவும்)

*******************************************************************************************************
ஆண்டு                        : 1985
மொழி                          : ஆங்கிலம்
என் மதிப்பீடு             : 4.4/5
மேலும் விபரங்களுக்கு IMDB
*******************************************************************************************************

18 comments:

  1. ஓக்கே ரைட்டு.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  2. உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் போதே இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. முதல் வேலையாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறை வருகை தந்து தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

      Delete
  3. என்னை அடிக்க தேடக் கூடாது.//
    சரி அடிக்க மாட்டேன் தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி

      Delete
  4. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்....

    ReplyDelete
  5. பார்க்கத் தூண்டும் விமர்சனமும், முன்னோட்டமும்....

    ReplyDelete
    Replies
    1. உங்களை படம் பார்க்க தூண்டுவதே என் வெற்றி

      Delete
  6. சாகும் முன் காண வேண்டிய சினிமா என்று சொன்னதற்காகவே இந்தப் பையன் ஒரே சினிமாவாக பார்த்துத் தள்ளிக் கொண்டுள்ளான் என்றி நினைக்கிறன்...

    அட ஆண்டவா நா எப்போ சா.மு.கா.ப பாக்கப் போறேனோ..

    ReplyDelete
    Replies
    1. இல்லை சீனு சின்ன திருத்தம்.. நான் எழுதுவதற்காக பார்க்கும் படங்கள் அல்ல இவை... ஒரு காலத்தில் என் கல்லூரி வாழ்வில் நான் கண்ட படங்களுள், என்னைக் கவர்ந்த வற்றை பற்றி இங்கு எழுதுகிறேன்.

      அது என்ன சா.மு.கா.ப ?

      Delete
    2. //இல்லை சீனு சின்ன திருத்தம்.. நான் எழுதுவதற்காக பார்க்கும் படங்கள் அல்ல இவை...//

      அட நான் அப்படி சொல்லலப்பா... இவ்ளோ படம் பார்த்து இருக்கிறியே நான் இதை எல்லாம் கேள்வி கூட பட்டதில்லையே என்ற ஒரு ஆதங்கத்தில் சொன்னேன்...

      சாகும் முன் காண வேண்டிய உலகசினிமாவை
      சாகும் முன் காண வேண்டிய படம் என்று கொஞ்சம் சுருக்கமாக குறிப்பிட்டேன்

      Delete
    3. பொழப்பே இல்லாத நேரத்துல, சினிமா பார்ப்பது மட்டுமே முழு நேர வேலையா வச்சிருந்தேன்

      Delete
  7. ஒரு நல்ல ரசிகனின் பார்வை!

    ReplyDelete
  8. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர். இந்தப் படம் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. உமது வருகை மிகவும் மகிழ்ச்சி தருகிறது... விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

      Delete