Thursday, July 4, 2013

சாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி

தாம்பரம் சென்ற பின் அம்பத்தூர் பக்கத்து ஊர் போல் ஆகிவிட்டது. திங்கட் கிழமை,   எனக்கு விடுப்பு என்பதால் உறவுகளை சந்திக்கலாம் என்று புறப்பட்டு, சென்னை புறவழிச்சாலை வழியே முகப்பேரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு ஸ்ப்ளென்டரில் சென்றேன். என் ஏழு வயது அத்தை மகன் ஆண்டிராய்ட் ஸ்லேடில் (அதுதான்பா இந்த tablet) சில பல மாயங்களை காட்டினான். இதுவரை டச் போன் கூட பயன்படுத்த முடியாத என் இயலாமையை எண்ணி அங்கிருந்து விடைபெற்று அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயலில் இருக்கும் என் பாட்டி வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினேன்.  

முகப்பேரின் அடையாளங்களான மேடும் பள்ளமும் நிறைந்த சாலைகளை கடந்து, திருமங்கலம் டு வாவின் செல்லும் பிரதான சாலையை நெருங்கும் போது, அம்புகள் போல் நீர்த்துளிகளை வருணன் பூமியின் மேல் தாக்க, அனைவரையும் போல் வண்டியை ஓரங்கட்டி விட்டு, மூடியிருந்த ஒரு கடையின் முன் இருந்த சிமெண்ட் சீட்டின் கீழ் மழைக்கு ஒதுங்கினேன். மழையின் வேகம் சற்று குறைந்தது, என் மூளையில் இருந்து ராம் பேசினான் "முட்டாள் ரூபக் ! மழை + வண்டி + பையில் பணம் இந்த நிலை எப்பொழுதும் வராது, நம் கையில் என்ன ஸ்மார்ட் போனா இருக்கு மழையை கண்டு அஞ்ச, விடுறா வண்டிய அந்த பஜ்ஜி கடைக்கு" .

நீங்கள் மழையில் நனைந்து, அந்த ஈரத்துடன் பஜ்ஜி சுவைத்ததுண்டா? இல்லை என்றால் உம் வாழ்வில் பெரும் சுகத்தை இழந்து உள்ளீர். சில ஆண்டுகளுக்கு முன், அம்பத்தூரில் இருந்த போது, என் நண்பன் ஒரு தள்ளு வண்டி கடைக்கு அழைத்து சென்றதுண்டு, நான் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம். அந்த கடையை நோக்கி, மழையில் நனைந்த படி, சாலைகளில் சக்கரத்துடன் நீந்தி, ஆடை நனைய கடையை அடைந்தேன். அங்கு எல்லா தட்டுகளும் காலியாக இருந்தன, உருளைக் கிழங்கு போண்டா இரும்புச் சட்டியில் தயாராகிக் கொண்டிருந்தது, காத்திருந்தேன்.



அம்பத்தூர் தொழிற் பேட்டையில் இருக்கும் AMBIT IT பார்க் எதிரே செல்லும் முதல் குறுக்கு தெரு வழியாக, முருகன் இட்லி கடையை கடந்து சென்று, வலது புறம் திரும்பினால் இந்த கடை இருக்கும். அல்லது திருமங்கலத்தில் இருந்து வரும் போது, மங்கல் ஏறி பூங்காவை தாண்டி வலது புற பாரத் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் சந்தில் திரும்பி சுமார் 500 மீட்டர் சென்றாலும், இடது புறத்தில் இந்த கடைக்கு வரலாம்.



இங்கு சமோசா, உ. கிழங்கு போண்டா, வாழக்கா பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, பிரட் பஜ்ஜி, காலி பிளவர் பகோடா முதலியவை கிடைக்கும். காலி பிளவர் பகோடா நூறு கிராம் 15 ரூபாய், மற்றவை எது சாப்பிட்டாலும் ஐந்து ரூபாய். கடையில் மொத்தம் ஐந்து பேர், மூன்று சப்ளை சிறுவர்கள், ஒரு பஜ்ஜி மாஸ்டர், ஒரு காஷியர் கம் உரிமையாளர்.





சூடான உ. கிழங்கு போண்டா வந்து இறங்கிய அடுத்த நொடி, இவளோ நேரம் எங்கு இருந்தார்கள் என்று யோசிப்பதற்குள் அனைவரும் வந்து சூரையாடினர், கடைசியில் அந்த தட்டில் மிஞ்சியது மூன்று போண்டா, அதிலும் ஒருவருடன் சண்டை போட்டு, இரண்டு நான் வாங்கினேன், அவருக்கு ஒன்று மட்டுமே. அடுத்து மிளகாய் பஜ்ஜி தயாராகிக்கொண்டிருக்க, உருளைக் கிழங்கு போண்டாவை இருவகை சட்னியுடன் நான் சுவைதுக்கொண்டே சில புகைப் படங்களை க்ளிக் செய்தேன்.



அடுத்து வந்த மிளகா பஜ்ஜிக்கு, போட்டி அதிகம் இருந்தாலும், என் ஹெல்மெட் கொண்டு அனைவரையும் அடித்து தள்ளி முந்தி விட்டேன். நம் தேவை அறிந்து மிளகா பஜ்ஜியை இரண்டாக வெட்டி கொடுப்பது சிறப்பு. காத்திருந்து, சண்டையிட்டு, எல்லா வகைகளையும் சுவைத்த பின் தான் அங்கிருந்து கிளம்ப மனம் வந்தது. சமோசா மட்டும் மாலையுடன் முடிந்தது ஏமாற்றம். மொத்த பில் நாற்பது ரூபாய் தான், ஆனால் நனைந்த சட்டையுடன் மழை சாரலில் சூடான-சுவையான பஜ்ஜியை சாப்பிட்டதில் எத்தனை ஆனந்தம்.

இந்த கையேந்தி பவன் செயல்படும் நேரம் மாலை மூன்று மணி முதல் இரவு 8 30 மணி வரை. உரிமையாளரிடம் பேசியதில் அவர் சொந்த ஊர் மருதூர் என்று தெரிந்தது, ' ஏன் சார் என் ஊர் எல்லாம் கேட்கறிங்க' என்று அவர் கேட்க 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்' என்று நான் கூற, 'அட உங்க எழுத்தால, என் தலையில எழுதனது மாறவா போகுது?' என்று ஏளனமாய் அவர் கேட்டார். கூட்ட நெரிசலில் அவரிடம் தொடர்ந்து  பேச முடியவில்லை, முக்கியமாக கடையின் பெயர் கேட்கவில்லை, நண்பர்கள் அந்த பக்கம் சென்றால் கடையின் பெயரை கேட்டு சொல்லுங்களேன். இருபது நிமிட பயணத்திற்கு பின் நான் என் பாட்டி வீடு சென்றடையும் பொழுது, மழையில் நனைந்ததற்கான எந்த தடையமுமின்றி, இஸ்திரி போட்டது போல் விறைப்பாக இருந்தது என் சட்டை, இதுதான் சார் சென்னையின் உஷ்ணம்!        

28 comments:

  1. மழையில் சூடா பஜ்ஜி/////

    ம்ம்ம்ம்.... செம டேஸ்ட் தான்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. மழை பெய்யும் மாலை வேளையில் பஜ்ஜி சாப்பிடுவது என்பது மிகவும் சுவையான அனுபவம்....

    // 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்'// ஆர்வக்கோளாறு அதிகமோ?

    ReplyDelete
  3. என்னவொரு ரசனையான சுவை...!

    ReplyDelete
  4. மழை பெய்யும் நேரத்தில கோன் ஐஸ் சுவைச்சு ரசிக்கற ஆசாமி நான்! எனக்கு சூடா ‌ே தவைப்படாது. ஆனா இதுவும் ரசனையா இருக்கும்னு நீ எழுதினத வச்சு தோணுது. ட்ரை பண்ணிப் பாத்துடறேன்.

    ReplyDelete
    Replies
    1. சார் வெளிய இதமான வானிலை இருக்கற சமயம் உள்ள ஒரு பஜ்ஜிய இறக்குங்க , அந்த சுகமே தனி

      Delete
  5. 'உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்'//
    >>
    வாழ்த்துக்கள் சகோ! நீங்க பிரபல பதிவராயிட்டீங்க!:-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ... இத்தனை சுலபமாவா ?

      Delete
  6. தவறா நினைக்கலைன்னா இந்த டெம்ப்ளேட்டை மாத்த முடியுமா சகோ!? கண்ணுலாம் வலிக்குது. இது எனக்கு மட்டும்தானா?!

    ReplyDelete
    Replies
    1. என் வாசகர் ஒருவருக்கு சிரமமேனும் மாற்றுவதுதான் சிறப்பு....

      அடுத்த முறை font sizeஐ அதிகரிக்கிறேன் சகோ ...

      பின்னூட்டுக்கு மிக்க நன்றி

      Delete
    2. மாற்றத்துக்கு நன்றி

      Delete
  7. மழை என்றாலே உடன் நினைவிற்கு வருவது... சூடான பஜ்ஜிதாங்க...

    ReplyDelete
    Replies
    1. என் இனம் சார் நீங்க....

      Delete
  8. உருளையில் தொடங்கி,
    வெங்காயம் சென்று,
    மிளகாயில் மிதந்து,
    வாழைக்காய் ருசி கண்டு,
    தேங்காய் சட்டினி, கார சட்டினி
    இரண்டிலும் பிறட்டிய,
    பஜ்ஜியின் சுவை நாவில் இருக்கையிலேயே
    இரண்டு போண்டாவும், ஒரு சமோசாவும்
    சாப்பிட்டுவிட்டு ஒரு கோப்பை தண்ணீருடன்
    முடிக்கையிலே சில்லென்ற மழைத் தூறல்
    கவிதை சொல்ல, அம்மம்மா என்னே ஆனந்தம்!!

    ReplyDelete
    Replies
    1. அடடா!
      எவளோ அழகாய்
      கவிதையில் சொல்லிட்டிங்க...

      Delete
  9. பூங்காவை தாண்டி வலது புற பாரத் பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் சந்தில் திரும்பி சுமார் 500 மீட்டர் சென்றாலும், இடது புறத்தில் இந்த கடைக்கு வரலாம்.// அப்புடியே கொஞ்சம் பின்னாடி வந்தா சமையல்கட்டு வந்துரும்னே.. இதுதான் நினைவுக்கு வந்தது..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. உங்க கடைய பத்தி எழுதலாம்னு தான்' என்று நான் கூற, 'அட உங்க எழுத்தால, என் தலையில எழுதனது மாறவா போகுது?' என்று ஏளனமாய் அவர் கேட்டார்.// என்னதொரு நக்கல். சும்மாவா விட்டீர்கள் அந்த கிராதகனை ஒரு பிரபல பதிவரைப் பார்த்து இப்படியா கேட்பது !!!!

    ReplyDelete
    Replies
    1. என் பாஸ் வன்முறையத் தூண்டரிங்க, நான் அந்த ஓரமா கண்டும் காணாம போய்டறேன்.

      Delete
  12. நீங்கள் மழையில் நனைந்து, அந்த ஈரத்துடன் பஜ்ஜி சுவைத்ததுண்டா?///கே.கே.நகரில் கூட சாப்பிடவில்லையே.ரூபக் தம்பி சீனுவை விட்டுவிட்டு நீ மட்டும் தனியா பஜ்ஜி சாப்பிட்டது சரியில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ... கே.கே. நகரில் சாப்பிட்டேன் சார், தாங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்

      Delete
  13. மழையில் நனைந்த படியே ஒரு ப்ளேட் தூள் பகோடா, சிலபல பஜ்ஜி வகைகள், என உள்ளே தள்ளினால் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே” என பாட்டு கூட பாடலாம்! :)

    நீங்கள் ரசித்து எழுதியிருப்பதைப் படித்தவுடன் நேற்று பெய்த மழை இன்னிக்கும் வராதான்னு யோசிக்க தொடங்கிடுச்சு மனசு! ஆனா என்ன, மழையில நனைஞ்சபடியே வட இந்திய ஸ்னாக்ஸ் தான் சாப்பிட முடியும் இங்கே! :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் :) ஒரு முறை Delhi வந்த போது aloo tikki, kulcha, bread panner, ரசகுல்லா, என்று பல சாலையோர உணவுகளை ரசித்த உண்ட நியாபகங்கள் :)

      Delete
  14. பஜ்ஜி மிகவும் பிடித்த ஓர் உணவு! அதுவும் மழையில் நனைந்தவுடன் என்றால் அதைவிட பெஸ்ட் எதுவும் இல்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete